News June 25, 2024
டி.ஆர்.பாலு எம்.பியாக பதவி ஏற்பு

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் 8ஆவது முறையாக வென்றுள்ளார்.
Similar News
News September 16, 2025
காஞ்சிபுரம்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

காஞ்சிபுரம் மக்களே!மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News September 16, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம், செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதியன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவுள்ளனர். (SHARE)
News September 16, 2025
காஞ்சிபுரத்தில் கரண்ட் கட்!

காஞ்சிபுரம், நீரவள்ளூர் துணைமின் நிலையத்தில் நாளை (செப்.,17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், தொடுர், மேல்மதுரமங்களம், கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)