News March 26, 2025
டிஜிபி, நெல்லை கலெக்டருக்கு நோட்டீஸ்

நெல்லை டவுனில் முன்னாள் எஸ்ஐ ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை கலெக்டர், தமிழ்நாடு டிஜிபிக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரங்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
நெல்லை: கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் எல்கைக்கு உட்பட்ட சிவந்திபுரம் பகுதியில் நதியுன்னி கால்வாயில் அணைக்கட்டு பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறையினர் மூலம் மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
நெல்லையப்பர் கார்த்திகை தீப விழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 3ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். முன்னதாக மாலையில் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நடைபெறும் இரவு 8 மணிக்கு அம்பாள் சன்னதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும்.
News December 1, 2025
நெல்லையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி இரவு நேர ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளார். அந்த வகையில் உதவி ஆணையர் அஜித்குமார் இரவு நேர ரோந்து அதிகாரியாகவும் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களும் இரவு ரோந்து அதிகாரிகளாக நியமித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


