News November 14, 2024

டிஜிட்டல் பயிர் ஆய்வு பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு. சந்திரகலா வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி கிராமத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை கல்லூரி மாணவியர்களை கொண்டு டிஜிட்டல் பயிர் ஆய்வு (digital crop survey) பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் இணை இயக்குனர் வேளாண்மை (பொறுப்பு) செல்வராஜ், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தபேந்திரன் உடனிருந்தனர்.

Similar News

News November 19, 2024

திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டையில் திமுக மகளிர் மற்றும் தொண்டரணி, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து அறிவிப்புகள் வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அமைச்சர் காந்தி வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாகிகளுக்கு திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசுவாசம் பள்ளி நிறுவனர் கமலஹாந்தி கலந்து கொண்டார்.

News November 19, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 22ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

“அண்ணா பதக்கம்” விண்ணப்பங்கள் வரவேற்பு

image

வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” பெற தகுதியுடையோர் வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மேலும் விருதுக்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.