News April 9, 2025
டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி, காவல்துறை எச்சரிக்கை

இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் அப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இந்த கோப்புகளை(Apk file) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்கை பயன்படுத்தி கொள்வார்கள். எனவே தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால் அதை தொடவோ திறக்கவோ வேண்டாம். இணைப்புகளை திறப்பதற்கு முன் அனுப்புநரை சரிபார்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்
Similar News
News January 6, 2026
மயிலாடுதுறை: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<18777243>>(பாகம்-2)<<>>
News January 6, 2026
மயிலாடுதுறை: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா? (2/2)

1. கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2. ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
5. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 6, 2026
மயிலாடுதுறை: மீண்டும் ரயில் இயக்க கோரி மனு

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கி வேளாங்கண்ணி வரை நீட்டிக்க குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் மீட்புக்குழு செயலா் கே.ராஜேந்திரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் அளித்த மனுவில் தரங்கம்பாடி வரை இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


