News December 5, 2024
டிக்கெட்டின்றி பயணம்: ரூ.1.81 கோடி அபராதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரயில்களில் டிக்கெட்டின்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,500 பயணிகளிடம் ரூ.1.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டு டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க ரயில்வே துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்.
Similar News
News November 1, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் குற்ற செயல்களை தடுத்திடவும், இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களைக் காத்திடவும், காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக். 31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
சேலம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News October 31, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் (31.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


