News April 15, 2025
டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News April 19, 2025
கைவினைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி வைக்கிறார். குன்றத்தூரில் நடைபெறும் இந்த விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும், 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன் மற்றும் ரூ.34 கோடி மானியம் வழங்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
News April 19, 2025
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்பிக்க, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் இன்று (ஏப்ரல் 19) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் நாளை மின்தடை

ஸ்ரீபெரும்புதுாரில் நாளை (ஏப்ரல் 20) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், NGO காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம், வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் (9AM – 5PM) மின்தடை ஏற்படும்.