News April 10, 2025
டாஸ்மாக் கடைகள் மூடல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 21, 2025
காஞ்சி: சிறந்த 10 BLO-க்களுக்கு பாராட்டு சான்றிதழ்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News November 21, 2025
காஞ்சி: EB பில்லை குறைக்க ஈஸியான வழி!

காஞ்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News November 21, 2025
நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!

தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ பயனாளிகளுக்காக நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தாலுக்கா வாரியாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்த ஆர்ப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


