News January 23, 2025
டங்ஸ்டன் ரத்து – அரிட்டாபட்டி மக்கள் கொண்டாட்டம்

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் திடீரென பற்றிய தீ

மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் எஸ்கலேட்டர் அறையில், நேற்று காலை 7:20 மணிக்கு திடீரென புகை வந்தது. இதனை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) வீரர் மீனாட்சிசுந்தரம் அறைக்குள் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பான் கொண்டு அணைத்தார்.தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து சேதமடைந்த மின் கேபிள்களை அகற்றினர். இன்ஸ்பெக்டர் அஜித்குமார் என விசாரிக்கிறார்.
News October 30, 2025
மதுரை மக்களே இதை நம்பாதீங்க – மாநகர காவல்துறை

மதுரை மாநகர் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. குறைந்த வட்டியில் லோன் அல்லது தனிநபர் கடன் வழங்குவோம் என கூறி இணையத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். கடன் தேவையுள்ளவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று மட்டுமே கடன் பெற வேண்டும். மோசடிக்கு ஆளானால் மதுரை சைபர் கிரைம்: 0452-2340029 (அ) 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம். SHARE!
News October 30, 2025
மதுரை: PHONE தொலைந்து விட்டால் நோ டென்ஷன்!

மதுரை மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


