News October 24, 2024

ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் – ஆட்சியர்

image

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும் அன்றைய தினம் மாத இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைப்பதற்கு வசதியாக வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். எனவே அன்றைய தினம் பொதுமக்கள் தங்களுக்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

நெல்லை புதிய வருவாய் அலுவலர் நியமனம்

image

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சுகன்யா என்பவர் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக துரை என்பவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. நேற்று துரை முறைப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

News November 12, 2025

தாடி வளர்க்க அனுமதி கோரிய கைதியால் பரபரப்பு

image

பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தான் தாடி வளர்க்க அனுமதிக்க வேண்டுமென சிறைக் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. முக்கிய காரணங்களுக்காக நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்று சமர்ப்பித்தால் உரிய முறையில் பரிசளிக்கப்படும் என சிலை வட்டாரம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

News November 12, 2025

நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்

image

நாங்குநேரி அருகே உள்ள பகுதியில் இன்று மதியம் 2 மணி அளவில் வேன் நான்கு வழி சாலை அருகே உள்ள இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்று கொண்டிருந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!