News March 6, 2025

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

image

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 30, 2025

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்தில் பெண் பலி

image

சூளகிரி பகுதியில், நேற்று (ஏப்ரல்.29) இரவு 9 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் உத்தனப்பள்ளி பகுதியில் 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

News April 30, 2025

அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

image

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) கிருஷ்ணகிரியில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்று அன்னையின் அருளை பெற்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வ வளமும், எல்லா வளமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-29) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!