News March 6, 2025
ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற <
Similar News
News September 18, 2025
பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து பேரிடர் கூட்டம்

இன்று காஞ்சிபுரத்தில் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் ஆலோசனை நடத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
News September 18, 2025
தமமுக காஞ்சி நிர்வாகி மறைவு – ஜான் பாண்டியன் இரங்கல்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரியாஸ் மாலிக் மறைவு குறித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ரியாஸ் மாலிக் மறைவு கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவனடி சேர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
News September 18, 2025
பாஜக obc அணியின் மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் படி obc அணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முன்னாள் மாவட்டத் துணைத் தலைவரான A.செந்தில்குமார் என்பவரை obc அணியின் மாநில துணை தலைவராக நியமித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.