News March 6, 2025
ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
Similar News
News December 6, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
சென்னை-பெங்களூர் இடையே சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே பயணிகள் நெரிசலை குறைக்க நாளை பெங்களூரு–சென்னை இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. காலை 08.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் 06255 ரயில், மதியம் 14.45 மணிக்கு எழும்பூர் அடையும். மாலை 15.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 06256 ரயில், இரவு 22.45 மணிக்கு பெங்களூரு அடையும்.
News December 6, 2025
சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீரை கொதிக்க வைக்கும் எலக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் செல்போன் சார்ஜ் பாயிண்ட்களை தவறாக பயன்படுத்தி கெட்டில் மூலம் டீ, காபி போடுவதாக புகார் எழுந்தது. ரயில்களில் கெட்டில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


