News September 13, 2024

ஜெயங்கொண்டம் அருகே லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

image

ஜெயங்கொண்டம் அடுத்த குருவாயூர் கோவில் மெயின் ரோட்டில் அதிகாலையில் நேருக்கு நேர் லாரி மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், நேற்று (நவ.18) மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமியை சந்தித்து, ஜெயங்கொண்டம் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பணி (S.I.R) குறித்தும், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன் உடனிருந்தார்.

News November 19, 2025

அரியலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல், இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 18, 2025

அரியலூர்: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

error: Content is protected !!