News August 4, 2024
ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருச்சியில் உள்ள 8,28,526 அட்டைதாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்
Similar News
News December 16, 2025
திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு, இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
திருச்சி: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
திருச்சி – சென்னை ரயில் நேரம் மாற்றம்

திருச்சி – சென்னை சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் சோழன் விரைவு ரயிலானது நாளை (டிச.17) ஒரு நாள் மட்டும், ஒரு மணி நேரம் தாமதமாக நண்பகல் 12 மணிக்கு புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


