News August 4, 2024
ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, புதுக்கோட்டையில் உள்ள 4,90,069 அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News November 27, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டதின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.27) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த மேற்பனைக்காட்டை சேர்ந்தவர் ஜனனி(19). இவர் புதுக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது தாயுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகம் அவரது இல்லத்தில் எலி பேஸ்ட்டை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரில், கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
புதுக்கோட்டை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!


