News April 11, 2025

ஜிப்லி புகைப்படங்கள் – ராமநாதபுரம் காவல்துறை எச்சரிக்கை

image

“ஜிப்லி படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள், அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு விளைவிக்கக்கூடிய சேனல்கள் மூலம் பெறும்போது சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது” ஜிப்லியை சுற்றியுள்ள ஆபத்துகளை பயனர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதிகமாக ஜிப்லி பயன்படுத்தும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்க.

Similar News

News December 25, 2025

இராமநாதபுரத்தை உலுக்கிய சம்பவம்; குற்றவாளிக்கு குண்டாஸ்

image

இராமேஸ்வரம், சேரங்கோட்டை 12ம் வகுப்பு மாணவி ஷாலினியை அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் காதலை ஏற்க மறுத்ததால் கடந்த (நவ‌.19)அன்று பள்ளிக்கு சென்ற மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி சந்தீஷ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 25, 2025

இராமநாதபுரம் மன்னரால் வாங்கப்பட்ட விமானம்

image

ராஜ ராஜேஸ்வர சேதுபதியின் ஆட்சியின் போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு ரூ.பல லட்சம் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார். மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. SHARE

News December 25, 2025

இராம்நாடு: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

image

வாலிநோக்கம் அருகே உள்ள தத்தங்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சின்னதுரை(எ)சதீஷ்குமார் (20) என்பவர் கஞ்சா செடி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் படி, வாலிநோக்கம் காவல் ஆய்வாளர் லட்சுமி, சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் ஆகியோர்கள் சென்று அவரது வீட்டை சோதனை செய்ததில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து அதனை பிடுங்கி வைத்திருந்ததை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!