News April 16, 2025
ஜிப்லிக்கு நோ சொல்லுங்க; சைபர் கிரைம் எச்சரிக்கை!

கோவை மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.
Similar News
News July 6, 2025
கவியருவி இன்று முதல் திறப்பு

ஆனைமலை அருகே கவியருவி, சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும், தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கடந்த ஒரு மாதமாக கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், தொடர்ந்து கவி அருவி மூடப்பட்டிருந்தது. தற்பொழுது கவியருவிக்கு நீர்வரத்து குறைந்ததால், இன்று முதல் கவியருவி திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News July 5, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
கோவை: இபிஎஸ் பிரச்சார பயண திட்டம்

இபிஎஸ் பிரச்சார பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 7 காலை 9 மணிக்கு வனபத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. மாலை 4.35 மணி அளவில் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் காந்தி சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ. பின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.