News August 18, 2024
ஜிப்மர் மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் பயிற்சி மருத்துவர்கள் புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் இருந்து ராஜீவ் காந்தி சிக்னல் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
Similar News
News September 18, 2025
புதுச்சேரி முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை

வானிலை ஆய்வு மையம் வெளிட்ட அறிக்கையில் தெற்கு வங்ககடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் சட்டப்பேரவையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
News September 18, 2025
புதுச்சேரி சட்டபேரவை கூட்டம் தொடங்கியது

புதுச்சேரியில் இன்று 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து கூட்டத்தை துவங்கி வைத்தார். இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி திருத்த மசோதா, புதுச்சேரியில் தொழில் துவங்குவதை எளிமையாக்குவது குறித்த மசோதா மற்றும் காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கும் மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளன.
News September 18, 2025
புதுச்சேரி நிவாரணப்பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மீன்வளம் & மீனவர் நலத்துறை மூலம் மீன் பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கான தடைக்காலப நிவாரணம் பெறும் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த பயனாளிகளின் 2-ம் கட்ட உத்தேச பட்டியல் இணையதளத்தில் (fisheries.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் இன்று (செப்.18) மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.