News April 22, 2025
ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவர்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஜிப்மர் நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
Similar News
News December 6, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க…
News December 6, 2025
புதுச்சேரியில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “மாநில அரசு உரிமைகளை பறிக்க மத்திய அரசு விதை உரிமைச் சட்டம் – 2025 கொண்டு வந்துள்ளது. மின்சார திருத்த சட்டம் -2020 விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் கொண்டு வர மாட்டோம் என கூறிய மத்திய அரசு, மின்சார திருத்த சட்டம் 2025 கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு சட்டங்களை எதிர்த்து போராட்டம் விரைவில் நடைபெறும்.” என தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
புதுவையில் 6 கடைக்காரர்கள் மீது வழக்கு

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி அருகில் உள்ள கடைகளில் கோரிமேடு போலீசார் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது புதுவை சஞ்சீவி நகரை சேர்ந்த சந்துரு, பீச்சைவீரன்பேட்டைச் சேர்ந்த பாஸ்கர், வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ரிதீஷ் மற்றும் சந்திரன், குமார், இளையராஜா ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


