News April 13, 2024
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அடுத்து மணல்மேடு டெக்ஸ் பார்க் அருகே KTPL பெண்கள் விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரைப்பெர்ரி தர்சுலி (26) தங்கி வேலை பார்த்தார். இவர் காய்ச்சல் சளி காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
கரூர் அருகே விபத்து; பெண் படுகாயம்

கரூர்-அரவக்குறிச்சி சாலையில் பாலகிருஷ்ணன், செல்வி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லோகேஷ் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேனுடன் மோதியது. இந்த விபத்தில் செல்வி படுகாயமடைந்து, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரவக்குறிச்சி போலீசார் சம்பவத்துக்காக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
கரூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 15, 2025
கரூர் அருகே அதிரடி கைது..!

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே வடக்கு மேட்டுப்பட்டி மந்தையில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய தகவலின் பேரில் வெள்ளியணை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சத்யராஜ் (26), குமார் (35), நவீன் (26) ஆகிய மூவரையும் கைது செய்து, 52 சூதாட்ட சீட்டுகள் மற்றும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.


