News August 17, 2024
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தான் தேமுதிக

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தேமுதிக நாள்தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றோம் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தான் தேமுதிக. ஓட்டு போட உரிமை உள்ள அனைவரும் முதல்வராக உரிமை உள்ளது. மக்கள் தான் எஜமானர்கள். அதனால், ஜாதி மதத்திற்கு இங்கு வேலை இல்லை” எனத் தெரிவித்தார்.
Similar News
News January 9, 2026
காஞ்சிக்கு வந்தது அலெர்ட்!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.10) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்திற்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
News January 9, 2026
காஞ்சியில் காவலர் அணுஅணுவாய் பலி

வாலாஜாபாத் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்வம் (51) கடந்த 3-08-25 அன்று கோவில் பாதுகாப்பு பணிக்காக திம்மராஜம்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.8) உயிரிழந்தார்.
News January 9, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


