News April 15, 2024

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவு: இபிஎஸ்

image

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில். அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது என்றார்.

Similar News

News November 17, 2025

சேலம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக் <<>>செய்து எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News November 17, 2025

சேலத்தில் வசமாக சிக்கிய குல்லா கொள்ளையர்கள்!

image

சேலம்: மாசிநாயக்கன்பட்டியைப் சேர்ந்த சந்திரசேகரன் (63) என்பவர் வீட்டில் கடந்த நவ.13.ஆம்தேதி குல்லா அணிந்த வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கோரிமேட்டை சேர்ந்த தீனா, அய்யனார், ரகுவரன், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 17, 2025

JUST IN: வாழப்பாடி அருகே பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

image

வாழப்பாடி: கல்வராயன்மலை கருமந்துறையில் இருந்து நேற்று இரவு சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, கரியக்கோயில் அணை கோழிகூப்பிட்டான் பாலம் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பயணிகள் 10 பேர் படுகாயமடைந்தனர். பயணிகளை மீட்ட கருமந்துறை போலீசார், முதலுதவி சிகிச்சைக்காக தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!