News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 24, 2025
எஸ்ஐஆர் பணி அலுவலர்களுக்கு ஆட்சியர் சதீஸ் பரிசு

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (நவ.24) பொன்னாடை அணிவித்து, பரிசுகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.கவிதா, தேர்தல் வட்டாட்சியர் திரு.அன்பு ஆகியோர் இருந்தனர்.
News November 24, 2025
பத்திரிக்கையாளர் அலுவலகத்தை திறந்த எம்.பி ஆ.மணி

தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒதுக்கியுள்ள பத்திரிகையாளர் அலுவலகம் திறப்பு விழா (நவ.24)இன்று நடைபெற்றது. தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரெ.சதீஷ் மற்றும் வழக்கறிஞர் ஆ.மணி எம்பி ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
News November 24, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆட்சியர் சதீஸ் சான்றிதழ்!

இன்று (நவ.24) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அத மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தருமபுரி,அரூர், காரிமங்கலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தனர். இந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆட்சியர் சதீஸ், (நவ-24) சான்றிதழ்களை வழங்கினார்.


