News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
Similar News
News January 10, 2026
கிளம்பாக்கத்தில் பரபரப்பு!

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஊரப்பாக்கம் சிக்னலில் இன்று அதிகாலை 2 மணியளவில் பெரும் விபத்து நிகழ்ந்தது. முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால், பின்னால் வந்த பாரம் ஏற்றிய லாரி பிரேக் பிடித்தது. அப்போது லாரியிலிருந்த இரும்பு கம்பிகள் சரிந்து, அருகில் வந்த கார் மீது விழுந்தன. உயிர் சேதம் ஏற்படவில்லை இருந்த போதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News January 10, 2026
செங்கல்பட்டில் துடிதுடித்து பலி!

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி உண்ணாமலை (55) மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை விரக்தியில் உண்ணாமலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


