News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 3, 2025
வேலூர்: வரதட்சணை சித்திரவதை – இளம்பெண் திடீர் சாவு

பள்ளிகொண்டா அடுத்த வல்லாண்டராமம் பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி கோகுலா(20). கோகுலா சீர்வரிசை கொண்டு வரவில்லை எனக்கூறி மதன், அவரது குடும்பத்தினர் கோகுலாவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட கோகுலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 3, 2025
வேலூரில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

வேலூர்: பொன்னை அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பிரவீன் (33), ராஜா (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியையும், அரிசியையும் பறிமுதல் செய்து உணவு கடத்தல் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News December 3, 2025
வேலூர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா வரும் 8ஆம் தேதி வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும், கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு 0416-2290348 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (டிச.2) தெரிவித்துள்ளார்.


