News April 2, 2025
ஜவுளி பூங்கா அமைக்க ரூ. 2.50 கோடி நிதியுதவி: கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 09.04.2025 அன்று 04.00 மணிக்கு நடைபெறுவதால் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 12, 2025
இரவு ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News April 11, 2025
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தங்க ஆபரணம் வழங்கல்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவண்ணாமலை குமரகோவில் தெருவை சேர்ந்த சண்முகா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சா.குமார் குடும்பத்தின் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 750 கிராம் பச்சைக்கல், வைரக்கல் போன்றவை பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
News April 11, 2025
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 04175233333 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 04175-233026 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 9445000905 ▶இணை வேளாண் இயக்குனர் – 9842692807 ▶திருவண்ணாமலை கோட்ட ஆட்சியர் – 04175252432 ▶சுகாதார துணை இயக்குனர் – 04175-232474 ▶பேரிடர் மேலாண்மை – 9442254997 ▶மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் – 9443228879 ▶மாவட்ட கல்வி அலுவலகம் – 8012599388 ▶மாவட்ட பதிவாளர் அலுவலகம் – 8300820153