News August 9, 2024
ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசின் மூலம் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வரும் 14ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
விருதுநகர்: பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்!

சிவகாசி அருகே ஆனையூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேதிப்பொருள் கலவை, மருந்து செலுத்துதல் உள்ளிட்ட வெடிபொருள் பாதுகாப்பு விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு தொழிலாளர்களை அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு நவ. 10 முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News October 31, 2025
விருதுநகர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க
News October 31, 2025
விருதுநகர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

நாளை (நவ. 1) விருதுநகர் நகராட்சி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநலம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ், முதல்-அமைச்சர் காப்பீடு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE


