News January 23, 2025

ஜல்லிக்கட்டு குறித்து கலெக்டர் அறிவுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் விழாக்குழுவினர் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான அனுமதி கோரும் விண்ணப்பங்கள் விழா நடத்த உத்தேசிக்கப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக www.jallikattu.tn.gov.in என்ற முகவரியில் இணைய வழியாக விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News November 16, 2025

பெரம்பலுர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய 600 கிறித்தவர்களுக்கு, மானியத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 550 பயணிகளுக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.60,000 வீதமும் மானியம் வழங்கப்படும். சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து 28.02.2026க்குள் சென்னை, சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

News November 15, 2025

பெரம்பலுர்: டிகிரி போதும்..பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா நேற்று (நவ-14) விழிப்புணர்வுக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். மேலும் கடைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நகை கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

error: Content is protected !!