News September 13, 2024
ஜமீன் பேரையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஜெமின் பேரையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹.13.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் வளர்க்கும் நாற்றாங்கால் மையத்தை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 13.09.2024 பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News December 6, 2025
பெரம்பலூர்: பழங்குடியினரை தேடிச்சென்ற ரேஷன் அட்டைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மலைவாழ் பழங்குடியின குடும்பங்களுக்கு, ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார். மேலும் ஆட்சியர் மிருணாளினி ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவாக வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், கோரையாறில் மலைவாழ் பழங்குடியின தம்பதியான விக்னேஷ், பிருந்தாவுக்கு ரேஷன் அட்டையை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா நேற்று வழங்கினார்.
News December 6, 2025
பெரம்பலூர்: 3வது நாளாக புறக்கணிப்பு

பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் 3-வது நாளாக கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவிலான விசாரணை கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையை கடந்த 1-ந்தேதி முதல் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல், நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டி கடந்த 3 நாட்களாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
News December 6, 2025
பெரம்பலூர்: 50,000 வாக்காளர்கள் நீக்கம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் தற்போது வரை, 50,767 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார், மேலும் வாக்காளர் பட்டியல் மறு சரிபார்ப்பு பணிகள் 16-ந்தேதி வரை நடைபெறும் என்றும், இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் ஜன.15-ந் தேதி வரை வாக்காளர் பதிவு அல்லது உதவி அலுவலரை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


