News March 25, 2025
ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏப்.3-இல் பொது ஏலம்

ரயில்வேக்கு நிலம் கொடுத்த சேலம் அமானி கொண்டலாம்பட்டி உள்ளிட்ட 15 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 30 லட்சம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் ஜப்தி பொருட்கள் ஏலத்துக்கு வருகிறது. வாதி, பிரதிவாதி தவிர யார் வேண்டுமானாலும் ஏலத்தில் கலந்து கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஏப்.03- ம் தேதி காலை 10 முதல் மாலை 05.45 மணிக்குள் சேலம் அஸ்தம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஏலம் நடக்கிறது
Similar News
News April 20, 2025
சேலம் வழியாக ப்ரௌனிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

வரும் ஏப்.26, மே 03, 10, 17, 24 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து ப்ரௌனிக்கும், மறுமார்க்கத்தில், ஏப்.29, மே 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கும் வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06055/06056) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News April 20, 2025
சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 382 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
சேலம்-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.