News January 23, 2025

ஜன.25-இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், புதிய குடும்ப அட்டை கோருதல், கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க குறைதீர் முகாம் நாளை மறுநாள் ஜன.25 (சனிக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

Similar News

News December 19, 2025

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (19-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ.118-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 6.25- ஆக நீடித்து வருகிறது. வட மாநிலங்களில் நிலவும் அதிகப்படியான குளிரின் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை சரிவின்றி உச்சநிலையில் நீடித்து வருகிறது.

News December 19, 2025

ப.வேலூர் அருகே தட்டி தூக்கிய போலீசார்!

image

ப.வேலூர் அருகே தெற்கு நல்லியாம்பாளையத்தில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக தகவலின் பேரில் வேலூர் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது போதை மாத்திரைகள் விற்ற தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பசுபதி, பிரபு,அபிதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ப.வேலூர் போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர்.

News December 19, 2025

விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!