News January 22, 2025

ஜனவரி.26 கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அரசின் உத்தரவுப்படி அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். 

Similar News

News November 28, 2025

சேலத்தில் 18000 பேர் சிகிச்சை அதிர்ச்சி தகவல்

image

சேலம் மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அவை இரு சக்கர வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாக உள்ளது அவ்வாறு நாய் கடிகள் சிக்கி சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 18,376 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு பேர் நாய் கடிக்கு சிகிச்சை டீன் தகவல்.

News November 28, 2025

மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!

image

மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி பகுதியில் மருமகளிடம் ஆசைக்கு இணங்குமாறு கூறி டார்ச்சர் செய்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் மாமனார் காசி (55) என்பவரை சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

News November 28, 2025

திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

image

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையம் ஒன்றியம் கல்வராயன் மலை, கிராங்காடு திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் கடந்த 22ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உறவினர் ராஜமாணிக்கம், ஜெயக்கொடி, பழனிசாமி மற்றும் குழந்தைவேல் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!