News April 14, 2024
சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பிரச்சாரம்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக நேற்று சமூக ஆர்வலர்கள் க.முனிவேல், ஆதிமூலம், ஆகியோர் தருமபுரி நகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; 1000000 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பிரச்சாரம் செய்கிறோம் என்றனர்.
Similar News
News November 30, 2025
தருமபுரி: +1 மாணவிக்கு மயக்க மருந்து…GYM மாஸ்டர் கைது

அரூர் அருகே சிலம்பரசன் ஜிம் நடத்தி வந்தார். அவரின் ஜிம்க்கு தினம் வரும் பெண்ணின் +1 மகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. மாணவி தனியாக போகும் போது அவரை காரில் அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பரசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 30, 2025
‘டிட்வா’ புயலால் தருமபுரிக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

வட கடலோரப் பகுதியை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயலால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தருமபுரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அண்டை மாவட்டங்களான கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 30, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (நவ.30) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் குமார் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


