News August 14, 2024
சோழவரத்தில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு

சோழவரத்தில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. பொன்னேரி அடுத்த சோழவரம் ஒரக்காட்டில் 14.5 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 12, 2025
திருத்தணி: ரகளை செய்த இளைஞருக்கு தர்ம அடி!

திருத்தணியில் நேற்று(நவம்பர் 11) மாலை சிவசக்தி நகர் பகுதியில் வட மாநில இளைஞர் செங்கற்களால் தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றாய் இணைந்து அத்தகைய வடமாநில இளைஞனை பிடித்து, கட்டி வைத்து அடித்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து வட மாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News November 12, 2025
திருவள்ளூர் போலீசார் எச்சரிக்கை!

திருவள்ளூர் மாநகர காவல் துறை சார்பில் இன்று (11.11.25) பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், போலி கடன் செயலிகளை (Fake Loan Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அறியப்படாத இணைய தளங்கள் அல்லது நம்பகமற்ற APK கோப்புகள் மூலம் செயலிகளை நிறுவுவது தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரி விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


