News February 15, 2025
சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெறிநாய் ஒன்று அங்கிருந்தவர்கலை துரத்தி துரத்தி கடித்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சோளிங்கர் நகராட்சி அதிகாரிகள் வெறி பிடித்த நாயை தேடி வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் குழந்தைகள் தின வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளி முன்பு அதிகாரிகள் குழந்தைகளுடன் கலந்துரையாடி, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் முதன்மை என காவல்துறை தெரிவித்தது.
News November 14, 2025
அரக்கோணத்தில் சூப்பர் அரசு வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணக்காளர், இரவு காவலர், பியூன் என பல்வேறு கற்றல், கற்றல் இல்லாத பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 14, 2025
ராணிப்பேட்டை: பட்டாவில் பெயர் மாற்றமா..?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


