News January 3, 2025
சோளக்காட்டு பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சோளக்காட்டில் கணவனை இழந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 6 நாட்களுக்கு பின் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.பஎ
Similar News
News October 25, 2025
கள்ளக்குறிச்சி: மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

உளுந்தூர்பேட்டை அஜுஸ் நகரில் வசித்து வந்த காந்திமதி கடந்த 2 வருடங்களாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். அக்-23 உடல்நிலை மிகவும் மோசமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த 21ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை அதாவது 25ம் தேதி சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் எனவும் செவ்வாய்க்கிழமை அட்டவணை படி பள்ளிகள் செயல்படும் என முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் கா.கிருத்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


