News March 29, 2024
சோமாசிப்பாடியில் புனித வியாழன் நிகழ்வு

சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News September 16, 2025
தி.மலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

தி.மலை மாவட்ட காவல்துறை சார்பில், போலி விளம்பர மோசடிகள் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என இதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண மோசடி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் (அ) www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. (SHARE)
News September 16, 2025
தி.மலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் இன்று (செப்.,16) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரிய வையுங்கள்!
News September 16, 2025
தி.மலையில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <