News October 25, 2024
சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் சென்னை லஞ்ச ஒழிப்–புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. இதனையடுத்து பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.
Similar News
News November 7, 2025
திருவள்ளூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 7, 2025
திருவள்ளூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News November 7, 2025
புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி தற்போது 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியின் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


