News April 14, 2024
சோடா தயாரித்து வாக்கு சேகரிப்பு

பாஜக சார்பில் போட்டியிடும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நெடும்பலம் பகுதியில் உள்ள சோடா கம்பெனியில் சோடா தயாரித்து கொடுத்து அங்கு வேலை பார்த்தவர்களிடம் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News November 19, 2025
திருவாரூரில் தொடரும் மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறி இன்றும் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 19, 2025
திருவாரூர்: 8.850 மெட்ரிக் டன் போலி உரம் பறிமுதல்!

திருவாரூர் அடுத்த கோமள பேட்டையில் உள்ள தனியார் விற்பனை கூடம் மற்றும் கடையில் உரங்கள் விற்பனை செய்யும் பொழுது, வேளாண்மைத் துறை சார்ந்த அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 8.850 மெட்ரிக் டன் எடையுடைய போலியான உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். மேலும், போலியான உரங்களை பறிமுதல் செய்து, உரிமையாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
News November 19, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.18) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


