News October 24, 2024
சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்த அண்ணன்

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் விவேக். இவர், தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில், விவேக்கின் அண்ணன் விக்னேஷ், நேற்று(அக்.,23) இரவு காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சொத்து தகராறில் காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
குமரி: 10th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! ரூ.56,900 சம்பளம்

குமரி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
குமரி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

களக்காடு SN பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த லிங்கம், ராணி தம்பதியினர் குமரி கடற்கரை சாலையில் டீ கடை நடத்தி வந்தனர். இருவரும் குடும்ப தகராறில் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் கடையில் இருந்த ராணியிடம் லிங்கம் சிலருடன் வந்து தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ராணியை லிங்கம் கத்தியால் குத்திவிட்டு ஓடினார். காயமடைந்த ராணி GHல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News December 13, 2025
குமரில் ராணுவவீரர் உடல் கருகி உயிரிழப்பு!

புதுக்கடை கீழ்குளம் பொத்தியான்விளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ். ஓய்வுபெற்ற ராணுவவீரர். கடந்த வாரம் பைக்கில் கடைக்கு செல்வது தொடர்பாக மனைவிக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோஸ் பைக் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த போது அவர் உடலில் தீ பற்றியது. உடல் கருகிய நிலையில் காயமடைந்த அவர் GHல் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை.


