News April 6, 2025
சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

திண்டுக்கல் மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கீழ் கண்ட லிங்கை அணுகவும் <
Similar News
News December 18, 2025
திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு – 5,168 பேர் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வை 5,168 பேர் எழுதுகின்றனர். இதில் 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் உள்ளனர். GTN கலைக்கல்லூரியில் 1,800, SSM பொறியியல் கல்லூரியில் 2,000, PSNA பொறியியல் கல்லூரியில் 1,360 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 2 தாள்களாக காலை 10 முதல் 12.30 மணி, பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரை நடக்கிறது.
News December 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

திண்டுக்கல் Tata COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D&SolidWorks பணிக்காக 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் இதற்கு ஜன.1க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுவதோடு, இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News December 18, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


