News April 6, 2025
சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 23, 2025
கோவை: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலர்!

கோவை இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான வீடு மதுக்கரையில் உள்ளது. இந்த வீட்டில் அவர், அவரது மகள், உறவினர் மகள் வசித்து வருகின்றனர். இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டரை வாகனத்தில் இறக்கிவிட வந்த போலீஸ்காரர் மாதவ கண்ணன், பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர், இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
News December 23, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், மையிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், சிட்ரா ஒரு பகுதி, கோல்ட்வின்ஸ் ஒரு பகுதி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை அடிவாரம், நாவவூர் பிரிவு, பொம்மணம்பாளையம், டாடா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 23, 2025
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

கோவை மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான, 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த<


