News March 26, 2025
சொத்துவரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தியது, கட்டடங்களுக்கு கூடுதலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28ஆம் தேதி கடையடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. *ஷேர்
Similar News
News December 18, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <
News December 18, 2025
சிவகங்கை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இளையான்குடி வட்டத்தில், வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2 நாட்களாக சமுதாயத் தலைவர்கள் புகைப்பட பலகைகள், சிமெண்ட் பீடங்களை அகற்றினர். நேற்று குமாரக்குறிச்சியில் பீடத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பரமக்குடி – இளையான்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
News December 18, 2025
காரைக்குடி: பூட்டை உடைத்து நகை திருட்டு.. தொழிலாளி கைது

காரைக்குடி அருகே கோட்டையூர் அருணாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான தோட்டம் மணச்சை பகுதியில் உள்ளது. இங்கு காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து, 5 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் தினகரன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவன் நகையை ரவிச்சந்திரன் திருடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.


