News August 24, 2024
சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்

கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி என்பவரிடம் டிஜிட்டல் கைது என கூறி நூதன முறையில் டெல்லியை சேர்ந்த அபிஜித்சிங் என்பவர் ரூ.84,50,000 மோசடி செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட அபிஜித்சிங்கை கைது செய்து தேனி அழைத்து வந்தனர். தொடர் நடவடிக்கையாக அவர் மீது நேற்று (ஆக.23) குண்டர் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News November 10, 2025
தேனி: ரூ.300 GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க

தேனி மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <
News November 10, 2025
தேனி: லாரி மோதி முதியவர் பலி

அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த மனோகரன் (67) தனது மகள் கீா்த்தனா, பேத்தி சிவதா்சினி, மகன் கவிபாரதி உள்ளிட்ட 7 பேருடன் உறவினரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் நேற்று (நவ.9) தேனிக்கு சென்றாா். தேவதானப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் காா் மீது மோதியதில் காரில் பயணித்த 7 பேரும் படுகாயமடைந்த நிலையில், மனோகரன் உயிரிழந்தாா். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 10, 2025
தேனி: சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்; கிராம மக்கள்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் மனமகிழ் மன்ற பார்க்கு அனுமதி வழங்க கூடாது என ஒட்டு மொத்த கிராம மக்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அப்படி அனுமதித்தால் வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பெரிய பேனர்களை ஆங்காங்கே வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


