News November 24, 2024

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

Similar News

News December 16, 2025

திருவள்ளூர்: சிறுமிக்கு சிறுவன் பாலியல் தொல்லை!

image

திருவள்ளூர், புழல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த போலீஸ் புகாரின் பேரில், சிறுவன் மீது வழக்கு பதிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 16, 2025

திருவள்ளூர் கலெக்டர் தொடங்கினார்!

image

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதாப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

News December 16, 2025

திருவள்ளூர்: பாலியல் வன்முறையால் மூதாட்டி பலி!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நொளம்பூரில், ஏழுமலை என்ற முதியவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மேரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற போது மூதாட்டியை ஏழுமலை கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஏழுமலையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!