News August 16, 2024
சைபர் கிரைம் போலீசார் அறிவுரை

தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். அதில் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆன்லைன் டிரேடிங் செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரு மடங்கு பணம் கிடைக்கும் என நூதன முறையில் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்புவர். அந்த லிங்கை பொதுமக்கள் தொடுவதால் தங்களது வங்கி கணக்கு திருடப்படும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
தேனியில் 31 கிலோ புகையிலை கடத்தியர் கைது!

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் நந்தக்குமார் (51). இவர் ஓசூரிலிருந்து வத்தலக்குண்டுக்கு 31 கிலோ எடையுள்ள 2,100 புகையிலை பாக்கெட்டுகளை பைகளில் வைத்து தனியார் பஸ்சில் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காட்ரோடு செக் போஸ்டில் போலீசார் நந்தகுமாரை சோதனை செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
News December 18, 2025
தேனி: குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

தேனி மாவட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலை கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் அல்லது தமிழ்நாட்டில் எந்த ஒரு நியாய விலை கடைகளிலும் டிச.31ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 18, 2025
தேனி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


