News August 2, 2024
சைக்கிள் பந்தையத்தில் வென்ற நீலகிரி மாணவன்

உதகை ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் டிப்ளோமா இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் எஸ். ஹகமது. இவர் திருச்சியில் நடைபெற்ற 200 கி.மீ. தொலை தூர சைக்கிள் ஓட்டும் பந்தையத்தில் இரண்டாவதாக வெற்றி பெற்றார். இந்நிலையில் மாணவர் எஸ். ஹகமதுவை ஜே.எஸ்.எஸ். கல்லூரி முதல்வர் தனபால் வாழ்த்தி பாராட்டினார். அப்போது, நிர்வாக அலுவலர் பசுவண்ண தேவரூ , உடற்கல்வி இயக்குநர் சிவபிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News November 7, 2025
நீலகிரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நவம்பர் 8-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கூடலூர் செம்பாலா அருகேயுள்ள G.T.M.O மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு துறைசார் மருத்துவர்கள் பங்கேற்க இருப்பதால், பொதுமக்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 7, 2025
நீலகிரி இரவு ரோந்து போலிசாரின் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
News November 6, 2025
நீலகிரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


