News June 27, 2024

சேலையூர்: ரூ.6 லட்சம் திருட்டு

image

சேலையூர் அருகே கோவிலாச்சேரியை சேர்ந்தவர் சேகர். கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் கிணறு தோண்டும் பணிக்கு சென்று விட்டனர். நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே, சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ. 6 லட்சம் பணம், 4 சவரன் நகை திருடு போனது. இதுதொடர்பாக சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News July 9, 2025

காவல் உதவி செயலின் வசதி மற்றும் முக்கியத்துவம்

image

செங்கல்பட்டு காவல்துறை மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், இருப்பிடத்தைப் பகிரலாம், அவசர எச்சரிக்கைகளைப் பெறலாம், அருகிலுள்ள காவல் நிலையங்களின் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் ஒரு அவசர SOS பொத்தான் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.

News July 9, 2025

காவல்துறை பெண்களுக்கான விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று (ஜூலை-9) வெளியிட்டுள்ளது. நீங்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் இன்றே வன்முறைக்கு முடிவுகட்ட உடனடியாக அழைக்கவும். பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்கள் ☎️ 1091 அல்லது ☎️ 181.
அல்லது அழைக்கவும் அவசர உதவி எண் ☎️100.

News July 9, 2025

இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 044-22500107/ 044-27427412 தொடர்பு கொள்ளலாம். *நண்பருக்கு ஷேர் பண்ணுங்க* <<17003794>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!