News December 6, 2024
சேலம் TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4, இதர போட்டித் தேர்வுகளுக்கான 4 மாத பயிற்சி வகுப்புகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டிச.10- ல் தொடங்குகிறது. இதில் பல்கலை. மாணவர்கள் மட்டுமல்லாது, வெளியில் இருந்தும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களும் சேரலாம். இதற்காக நேரடியாக பயிற்சி மையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 9789319722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News November 19, 2025
சேலத்தில் ரூ. 2 லட்சம் கடனுக்காக 3 உயிர்கள் பலி!

சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.போலீசார் விசாரணையில் பால்ராஜ் எழுதிய கடிதம் சிக்கியது.அதில், அவர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்த சண்முகம் என்பவர் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அதனால் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.பள்ளப்பட்டி போலீசார்,சண்முகத்தைக் நேற்று கைது செய்தனர்.
News November 19, 2025
கெங்கவல்லி கொலை வழக்கில் தீர்ப்பு!

சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம், வீரகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டசெல்வராஜ் (57), ராயர்பாளையம், வாணியர் தெருவை சேர்ந்த செல்வம் (55) என்பவரை கடந்த 20.09.2023 ஆம் தேதி அருவாளால் கடுமையாக தாக்கியதில் செல்வம் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
News November 19, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் போலியாக நடந்து, வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்களை கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவதாக சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அன்யர்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர வேண்டாமெனவும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.


