News April 21, 2025
சேலம்: TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஏப்.22) காலை 09.30 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0427- 2401750 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
Similar News
News December 2, 2025
சேலம்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
சேலம் அரசு பள்ளி மாணவன் சாதனை!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன் கபிலன், தமிழக அணியில் கலந்து கொண்டு 56 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சேலம் மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
சேலத்தில் கடன் தொல்லையால் நேர்ந்த சம்பவம்!

சேலம் அம்மாபேட்டை மாருதிநகர் 3வது கிராஸ் பகுதியில் வசிக்கும் சரவணன் (42) சலவை தொழில் செய்து வந்தார். ரூ.3 லட்சம் கடன் பிரச்சனையால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


